பன்னீர் டிக்கா மசாலா !!

Update: 2024-10-03 09:50 GMT

பனீர் டிக்கா மசாலா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவையான பொருட்கள் :

ஊற வைக்க :

பனீர் சதுரமாக கட் செய்தது - 400கிராம்

பெரிய வெங்காயம் சதுரமாக கட் செய்தது - 1

குடைமிளகாய் சதுரமாக கட் செய்தது - 1

உப்பு - 1டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1டீஸ்பூன்

தனியாத்தூள் -1டீஸ்பூன்

சீரகத்தூள் - 2/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன்

அரைக்க:

வெண்ணெய் - 2டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் பெரிய சதுரமாக கட் செய்தது - 150 கிராம்

பெங்களூர் தக்காளி கட் செய்தது - 300கிராம்

கருப்பு ஏலக்காய் - 1

ஏலக்காய் - 2

பிரிஞ்சி இலை - 1

இலவங்கம் - 4

சோம்பு - 2டீஸ்பூன்

தனியா தூள் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1டீஸ்பூன்

உப்பு - தேவையானஅளவு

இஞ்சி - 1இன்ச் அளவு

பூண்டு - 10பல்

முந்திரி - 10

க்ரேவி செய்ய :

எண்ணெய் - 2டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 2டீஸ்பூன்

கசூரிமேத்தி - 1டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2டேபிள் ஸ்பூன்

தேன் - 1டேபிள் ஸ்பூன்

ஃப்ரெஷ் க்ரீம் - 4டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பனீரிலிருந்து கரம் மசாலா தூள் வரை உள்ள பொருட்களை கலந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்

குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம் முதல் முந்திரி வரை உள்ள பொருட்களை 2 நிமிடம் வதக்கி 100மில்லி தண்ணீர் ஊற்றி 1விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறின பின் அரைத்து வடிகட்டவும்

ஒரு நான் ஸ்டிக் பேனில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஊறிய பனீரை லேசாக வறுத்து எடுக்கவும். பின்னர் அதே பேனில் ஊறிய குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வேக வைத்து எடுத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி, வடிகட்டி வைத்த மசாலாவை ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பு சிம்மில் வைக்கவும்

இதனுடன் தேன், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம், கசூரிமேத்தி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும்

இதில் பனீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பன்னீர் டிக்கா மசாலா தயார்.

Tags:    

Similar News