கோவைக்காய் ஊறுகாய் !

Update: 2024-07-17 11:06 GMT

கோவைக்காய் ஊறுகாய் !

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஐந்து நபர்களுக்கு தேவையான பொருட்கள்

கோவைக்காய் 300 கிராம்

இஞ்சி

எலுமிச்சை

இந்துப்பு அல்லது பிளாக்சால்ட்

தயாரிப்பு முறை:-

கோவைக்காயை கழுவி மிகச் சிறு துண்டுகளாக வெட்டவும். இஞ்சியைத் தோல் சீவி வெட்டி அரைத்துச் சாறு பிழியவும். எலுமிச்சையை கொட்டை நீக்கிச் சாறு எடுக்கவும். எலுமிச்சைச் சாறையும், இஞ்சிச்சாறையும் கலந்து அதில் வெட்டிய கோவைக் காயை பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். தேவைப்படின் இந்துப்பு அல்லது பிளாக்சால்ட் சிறிது சேர்க்கலாம். இதுவும் அடுப்பில் சமைக்காத ஊறுகாய். எண்ணெய் சேர்க்காத சிறப்பான ஊறுகாய்.

பயன்கள்.

மலச்சிக்கல், வாயுப் பொருமல், தொப்பை, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் விலகும். நீரழிவு அன்பர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். எல்லா பிணி அன்பர்களும் சாப்பிடலாம். உயர் இரத்த அழுத்தம். கொலஸ்ட்ராலால் அவதியுறும் அன்பர்கள் தினமும் சாப்பிடலாம். எல்லாவகை இயற்கை அவல் சாத வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

Tags:    

Similar News