பழத்தில் குழம்பா... ! ஆமாங்க... ! அன்னாசி பழம் மோர் குழம்பு செய்வது எப்படி?

Update: 2024-03-29 11:36 GMT

அன்னாசி பழம் மோர் குழம்பு

அட, இது என்ன அதியமா... இருக்கு! அன்னாசி பழ ஜூஸ் கேள்விபட்டிருக்கிறோம் இது என்ன மோர் குழம்பு... வத்த குழம்பு புளி குழம்பு மாதிரி ....அட ஆமாங்க , எப்ப பாரு காய்கறி போட்டு குழம்பு வச்சிக்கிட்டு. அன்னாசி பழம் போட்டு ஒரு முறை இந்த குழம்பு வச்சு பாருங்களேன். அட வித்தியாசத்துக்காக மட்டுமில்லாமல் மருத்துவ குணமாகவும் இந்த டிஷ் இருக்கும் .மாரடைப்பு ,புற்றுநோய், ரத்த சோகை, சாதாரண உடல் வலி, பித்தம் ,செரிமான கோளாறுகள் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு என அத்துணை நோய்களையும் குணப்படுத்தும் என்றால் ஏன் இதை செய்து பார்க்க கூடாது. அன்னாசி பழம் மோர் குழம்பு செய்வது எப்படி? என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் .

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் -1

தயிர் -1 கப்

தேங்காய் துருவல்- 1/2 கப்

என்ணெய் -50ml

கடுகு-1/4 டேபிள் ஸ்பூன்

சீரகம்-1/4டேபிள் ஸ்பூன்

வெந்தயம் -1/4டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய்-1

வர மிளகாய் -4

மஞ்சள் தூள்-1/4

பெருங்காயம் -1 சிட்டிகை

உப்பு- தேவையான அளவு

செய்முறை :

முதலில் அன்னாசி பழத்தை நன்கு தோல் சீவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் ஒரு கடாயில் நறுக்கிய பழத்தை சேர்த்து பழம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி,அதனுடன் மஞ்சள் தூள் , தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும். மற்றொரு புறம் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல்,சீரகம், மிளகு, வெந்தயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்த விழுதை அன்னாசி பழத்துடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். இரண்டு மூன்று நிமிடங்கள் வெந்ததும் ஒரு கப் கட்டியான தயிரை மிக்ஸியில் ஒரு அரை அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பை மிக குறைந்த தீயில் வைத்து தயிரை சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவையென்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம் . அது நன்கு சூடாகும் வரை தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும் . தாளிப்பு கரண்டியில் எண்ணெய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி இறக்கினால் அன்னாசிப்பழம் மோர் குழம்பு ரெடி.சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Tags:    

Similar News