பைனாப்பிள் ஜாம் ரெசிபி !!

Update: 2024-11-20 08:53 GMT

Pineapple Jam 

ஜாம் எல்லாத்துக்குமே பிடித்த ஒன்று, இதனை விரும்பும் குழந்தைகளுக்கு ஹெல்தியா வீட்டிலேயே செய்யலாம்.


தேவையான பொருட்கள் :

*அன்னாசி பழம்

*சர்க்கரை

*எலுமிச்சை சாறு

செய்முறை :

அன்னாசி பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி அதனை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.

பின்பு அடுப்பில் கடாய் வைத்து அரைத்த அன்னாச்சிப் பழக் கூழுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு 10 – 15 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

அன்னாச்சிப் பழ சிரப் கெட்டியாக ஆரம்பிக்கும், தண்ணீர் நன்கு வற்றும் வரையும் 5- 8 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.

நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்க்க வேண்டும்.

எலுமிச்சை சாறு சேர்ப்பதால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை உறையாமல் இருக்கும். பின்பு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து அதனை ப்ரிட்ஜில் வைத்து தேவையான நேரங்களில் சாப்பிடலாம். 

Tags:    

Similar News