என்னது நுங்கு குழம்பா ? வாங்க எப்டின்னு பார்போம் !!

Update: 2024-05-01 08:41 GMT

நுங்கு குழம்பு 

தேவையான பொருட்கள் :

நுங்கு -5

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 2

இஞ்சி பூண்டு பெஸ்ட் - 1 டியூஸ் ஸ்பூன்

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பட்டை - சிறியது

மாரதிமொக்கு - 1

கசகசா - சிறிதளவு

பூண்டு - 3 பள்

கறிவேப்பிலை ,கொத்தமல்லி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள்- ஆப் டியூஸ் ஸ்பூன்

மிளகாய் தூள்- 2 டியூஸ் ஸ்பூன்

கரம்மசாலா- ஆப் டியூஸ் ஸ்பூன்

மல்லித்தூள் - 1 டியூஸ் ஸ்பூன்

தேங்காய் - அரை மூடி

பொட்டுகடலை - சிறிதளவு

தண்ணிர் - தேவையான அளவு

செய்முறை :

நல்ல கல் மாதிரியான நுங்கை எடுத்துக்கோங்க அதோட மேல் தோல் எல்லாமே எடுத்தவுடன் அந்தத் தோல் சீவி எடுத்த நுங்கை பீஸ் பீஸ் ஆக நறுக்கி எடுத்துக்கோங்க அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சிறிதளவு சோம்பு சிறிதளவு கசகசா ரெண்டு கிராம்பு ரெண்டு ஏலக்காய் சிறிதளவு பட்டை ஒரு மராத்தி மொக்கு அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு மூன்று பல் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வதங்கியவுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் 2 ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு மீடியம் சைஸ் தேங்காய் ஒரு மூடி துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு கராமசாலா சேர்த்து நன்றாக வதக்கவும் சிறிதளவு பொட்டுக்கடலை சேர்த்து இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பிறகு இதை ஆரிய உடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து இதில் அரை வெங்காயம் நீளமாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு இரண்டு தக்காளி குட்டி குட்டி பீசாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும், இதை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும், அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் சேர்த்து வதக்கவும் அதோடு நறுக்கி வைத்த நுங்கை சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கிய பிறகு அரைத்து வைத்த மசாலாவை சேர்த்துக்கொண்டு வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதி வந்ததும் உப்பு காரம் பார்த்து சிறிதளவு கருவேப்பிலை கொத்தமல்லியை தூவி இறக்கி வைத்தால் நுங்கு குழம்பு ரெடி வாங்க சாப்பிடலாம்.

Tags:    

Similar News