சுருக்குனு இருக்க நெல்லி துவையல் !!

Update: 2024-05-02 08:48 GMT

நெல்லி துவையல்

சுருக்குனு சுவையா இருக்க நெல்லி துவையல் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முழு நெல்லி 250 கிராம்

பூண்டு - ஐந்து துண்டுகள்

இஞ்சி - 20 கிராம்

மிளகுத்தூள் - சிறிது

பிளாக்சால்ட் - சிறிது

தயாரிப்பு முறை :

முழு நெல்லிகளை கழுவி வெட்டி கொட்டைகளை நீக்கவும். குறைந்த அளவு நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெட்டிய அல்லது ஊறிய நெல்லிகளுடன் பூண்டு தோல் நீக்கி சேர்க்கவும் இஞ்சியையும் தோல் நீக்கி சேர்த்து கெட்டியாக அரைக்கவும் அத்துடன் மிளகுத்தூள் பிளாக் சால்ட் சேர்க்கவும் அருமையான நெல்லி துவையல் சாப்பிட தயார்.

இயற்கை இட்லி தயிர் சாதம் மற்றும் பிற உணவுகளுடன் இணைத்து சாப்பிடலாம். ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம் பல பிணிகள் குறையும் நீரழிவு நண்பர்கள் அவசியம் அடிக்கடி சாப்பிட வேண்டும். பசியின்மை அஜீரணம் விலகும் இளமை மேம்படும் கண்ணாடி அணிந்த அன்பர்கள் தினமும் செய்து சாப்பிட வேண்டும்.

Tags:    

Similar News