ஸ்பினாச் அடையா? எப்டி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க!
ஸ்பினாச் அடை
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
ஸ்பினாச் கீரை - 1 கப்
வெங்காயம்- 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் கீரையினை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை பொடிதாக நறுக்கி வாணலியில் 1 டீஸ்பூன எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கீரையினை போட்டு 3 - 4 நிமிடம் வதக்கி இறக்கவும்.
சிறிது நேரம் ஆறவிட்டு பின் வதக்கிய கீரையினை கேழ்வரகு மாவுடன் உப்பு, சிறிது தண்ணீர் சோத்து நன்றாகப் பிசையவும்.
பின்னர் சிறு சிறு அடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் 3-4 நிமிடம் வேகவிட்டு சுட்டு எடுக்கவும். மிகவும் சத்தான ஸ்பினாச் அடை ரெடி.
சிலர் அடையினை தோசை கல்லிலேயே தட்டுவார்கள். அப்படி இல்லாமல் அடை தட்டும் பொழுது ஒரு துணியில் அல்லது ப்ளாஸ்டிக் கவா மீது தட்டினால் நன்றாக வரும். அதன் பின் அதனை மிகவும் சுலபமாக தோசைக்கல்லில் போடலாம்.