பால் கெடாமல் இருக்க என்ன செய்யலாம் !
Update: 2024-04-16 07:30 GMT
கொதிக்கக் காய்ச்சாமல் பாலைப் பயன் படுத்தக் கூடாது.
பாக்கெட் பால் வாங்கும் இல்லத்தரசிகள் உடனடி உபயோகம் இலலாது போயின் கவலைப் பட வேண்டாம். தண்ணீரில் மூழ்கும்படி பால் பாக்கெட்டைப் போட்டு வைத்தால் 10 மணி நேரம் கழித்துக் கூட பாலைக் காய்ச்சலாம். கெட்டுப் போகாது.
சுத்தமான பாத்திரத்தில் வைத்தால் தான் பால் கெடாமல் இருக்கும். காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளைப் போட்டு வைக்கலாம்.
குளிர்ச்சியும் இருட்டும் உள்ள இடத்தில் தான் பால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.
சமையல் செய்யும் போது காய்கறிகளின் சத்து அதிகமாக வீணாகாமலிருக்கக் காய் கறிகளைப் பெரும் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.