சாமை பகாளா பாத்
சாமை பகாளா பாத்
தேவையான பொருட்கள்:
சாமை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
தயிர் - 1/4 கப்
பால் - 2 கப்
திராட்சை, முந்திரி - தலா 5
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு
பச்சை, கருப்பு திராட்சைகள் மாதுளம் பழ முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு
தாளிப்பதற்கு:
கடுகு, சீரகம் - தலா 4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு ½ டீஸ்பூன்
எண்ணெய் 1 டீஸ்பூன்
செய்முறை:
சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்யை காயவைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் தாளித்து, அத்துடன் முந்திரி, திராட்சை, பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து, சாமை சாதத்தில் கொட்டவும்.
பால், தயிர்,பழ வகைகள், உப்பு, சர்க்கரை, கொத்துமல்லித்தழை ஆகியவற்றை சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.