டேஸ்டா சமைக்க ஷார்ட்டா டிப்ஸ் !

Update: 2023-10-14 08:31 GMT

டிப்ஸ் !

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

1.தோசை சுடும் போது தோசை கல்லில் மாவு ஒட்டாமல் இருக்க சிறிதளவு புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்து விட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

2.தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.

3.ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

4.தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

5.தோசை கல்லில் தோசை சுடும் பொழுது தோசை மாவில் சிறிது சர்க்கரையை போட்டு தோசை சுட்டால் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

Tags:    

Similar News