ஸ்பைசி ஸ்டஃப்டு டமாட்டர் !

Update: 2024-05-24 11:16 GMT

 ஸ்டஃப்டு டமாட்டர் 

திணியல் தக்காளி

"மேனி அழகை ஜொலிக்க வைக்கும் தக்காளி காய்கறிகளின் இளவரசி"

(ஐந்து நபர்களுக்கு) தேவையான பொருட்கள்:

தக்காளி - 10

பொரிகடலை - 50 கிராம்

வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்

தேங்காய் துருவல் - அரை மூடி

கொத்துமல்லி தழை, புதினா - சிறிது

மிளகுத்தூள், சீரகத்தூள் - சிறிது

பிளாக்சால்ட் - சிறிது

தயாரிப்புமுறை:

நன்றாகத் தக்காளியைக் கழுவவும். பொரிகடலை வேர்க் கடலை, தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு இவை களை ஒன்றாக மிக்ஸியில் சிறிது நீர்விட்டுக் அரைக்கலாம் அல்லது நீர் இல்லாமல் பொல பொல என்றும் அரைக்கலாம் தக்காளியை மேல் பக்கத்தில் மட்டும் நான்காக ஆறாகக் கீற வேண்டும். அதே சமயம் தக்காளி முழுதாக இருக்கும். கீறிய பகுதிகளில் அரைத்த சூரணத்தை, துவையலை கதிருக்குயில் திணித்திட வேண்டும். தக்காளியின் உச்சியில் சிறிய மல்லித் தழைகளை, புதினாவைச் சொருகி விடவும். தனித்தக்காளி சாப்பிடாதவர்கள் கூட இதை மிகவும் விரும்பி சாப்பிடுவர். மிகச் சுவையாக இருக்கும். இதுவே ஸ்டஃப்டு டாமட்டர் எனப்படும்.

பயன்கள்:

தக்காளிச் சாறின் பயன்கள் அனைத்தும் கிட்டும். பசியின்மை விலகி ஜீரணம் மேம்படும் எளிதில் ஜீரணம் ஆகும். இலகு உணவு நீரழிவு, உயர் இரத்த அழுத்த அன்பர்களும் சாப்பிடலாம். உடல் குளிர்ச்சி பெறும். வெயில் காலங்களில் அருமையாகச் சாப்பிடலாம் உடல் தொப்பை, கொலஸ்ட்ரால், அதிக எடையை சரியாக்கும் மந்திர உணவு. தினம் சாப்பிடக் கண் பார்வை மேம்படும்.

இதேபோல் வெண்டைக்காயை நடுவில் நீள வாக்கில் கீறி அதனுள் இப்பூரணம் அல்லது துவையலைத் திணித்தும் வெண்டைக்காய் ஸ்டஃப்டும் மாற்றிச் செய்யலாம்.

வெயில் காலங்களில் அடிக்கடி சாப்பிட்டு உடல் குளிர்ச்சி பெற்று மூலச்சூடு மூல வியாதியில் இருந்து விடுதலை பெறலாம். இரத்த சோகை விலகி இளமை மேம்படும். முகப்பொழிவுக் கூடும் தோல்பிணிகள் விலகி உடல் வனப்புக் கூடும். கர்ப்பம் அடைந்த பெண்களின் அற்புத உணவு தக்காளியாகும்.

Tags:    

Similar News