சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம் ரெசிபி !

Update: 2024-12-20 12:04 GMT

Sugarcane  payasam

தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளி கிழங்கு (சிறிது)- தோல்களுடன் 1 கப்

தேங்காய் - 1 கப்

வெல்லம் - 1/2 கப்

தண்ணீர் - தேவைகேற்ப

முந்திரி - 2

செய்முறை :

ஒரு மிக்ஸி சாரலில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வழுவழுப்பாக அரைத்து கொள்ளுங்கள்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம் சேர்த்து சில நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .

அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். தேங்காய் துருவல், வெல்லக் கலவையை இப்பொழுது இதனுடன் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கலக்கவும்

வறுத்த முந்திரி பருப்பு எல்லாவற்றையும் பாயாசத்துடன் சேர்த்து அதில் ஏலக்காய் தூளை மேலே தூவி 2-3 நிமிடங்கள் சூடுபடுத்துங்கள். சுடச்சுட பாயாசம் ரெடி.

Tags:    

Similar News