ஸ்வீட் கார்ன் சுண்டல் !
Update: 2024-05-03 17:19 GMT
தேவையான பொருட்கள்:
ப்ரோசன் ஸ்வீட் கார்ன் - 1 கப்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் -1
காய்ந்த மிளகாய் - ௨
தேங்காய்த் துருவல் கறிவேப்பிலை, மல்லி, - 1 டேபிள்ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்தம்பருப்பு, விதை நீக்கி கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் இவைகளை தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், டீப்ராஸ்ட் செய்த கார்ன் சேர்த்து பிரட்டவும்.
சிறிது உப்பு தூவி, தேங்காய் துருவல், மல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.
சுவையான மணமான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி.