டென்ஷனை குறைக்கும் தேநீர் ! எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

Update: 2024-04-16 07:12 GMT

தேநீர்

ஐந்தாயிரம் ஆண்டு களுக்கு முன்பு பழங்கால சீனாவில்தான் டீ கண்டு பிடிக்கப்பட்டது. சீன சக்கரவர்த்தி 'ஷென் நுங்' என்பவர்தான் டீ என்ற தேநீரைக் கண்டு பிடித்தார். இவர் ஓர் ஆக்க பூர்வமான விஞ்ஞானியும் கூட.

''ஷென்' ஒரு கோடை நாளில் தன் அமைச்சர்களுடன் மாநிலங்களைப் பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இடையில் ஓய்வு எடுக்கலாமே என ஒரு மரத்தடியில் முகாமிட்டார்.

ஷென் எப்போதும் குடிப்பதற்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரையே பயன்படுத்துவார். வழக்கம்போல அவருக்கு வெந்நீர் போட்டுக்கொண்டிருந்தனர் வேலையாட்கள். அப்போது அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து உதிர்ந்த, உலர்ந்த இலைகள் சில காற்றில் பறந்து வந்து கொதித்துக்கொண்டிருந்த நீரில் விழுந்துவிட்டன விழுந்த சில வினாடிகளில் இலைகள் நீரில் கலந்து கரைந்து நீரே காபி நிறமாக மாறியது.

ஷென் தான் விஞ்ஞானி ஆயிற்றே. இதையெல்லாம் கவனித்து, அந்த நீரை ஏன் பருகிப் பார்க்கக்கூடாது என்று ஆர்வம் காட்டினார். அந்தப் புதிய பானத்தைக் கொஞ்ச ருசித்துப் பார்த்தார். சுவை வித்தியாசமாக இருந்ததோடு அதன் பின் அவருக்குள் புத்துணர்ச்சி ஏற்பட்டதையும் அறிந்தார். அந்த இலை எந்தச் செடி அல்லது மரத்திலிருந்து உதிர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு தொடர்ந்து அந்த இலையைப் பயன்படுத்தி, அந்த பானம் தயாரித்து பருகத் தொடங்கினார். அந்த இலைதான் 'தேயிலை'. அந்த பானம்தான் தேநீர் (டீ). இப்படித்தான் டீ கண்டுபிடிக்கப்பட்டதாக சீன வரலாறு கூறுகிறது.

Tags:    

Similar News