இப்பவே செய்து பார்க்க தூண்டும் ...இறால் பிரியாணி..
மட்டன் ,சிக்கன் ,வாத்து ,காடை அப்டினு திரும்ப திரும்ப அதையே செஞ்சு போர் அடிக்குதா ?
அட விடுங்க ..இறால் பிரியாணி செஞ்சு அசத்திடுவோம். "பிரியாணி என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும் அதிலும் இறால் பிரியாணி என்றல் சும்மா விடுவோமா..?" அப்டின்னு உங்க வீட்டுல இருக்குறவங்க ரசிச்சு சாப்பிடனுமா ?
உங்கள பாரட்டனுமா?அப்போ இதை ட்ரை பண்ணுங்க .நிச்சயம் பாராட்டு உங்களுக்குத்தான். வாங்க அதை எப்படி செய்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 100 ML
நெய் - 4 டீஸ்பூன்
இறால் - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 400 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை- தேவைக்கு ஏற்ப
பச்சை மிளகாய் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 மேஜை கரண்டி
கரம்மசாலா தூள் - 3 மேஜை கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
புதினா இலை -1 கைப்பிடி அளவு
எலுமிச்சை - 1
தயிர் - 1 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய், நெய்யையும் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை,ஏலக்காய் ,கிராம்பு, சோம்பு சேர்த்து பொரிந்ததும் ,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் .அத்துடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
பின் நன்கு வதக்கியதும் பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து தக்காளி, கரம் மசாலா,மஞ்சள்தூள் சேர்த்து கிளறி பின் நன்கு சுத்தம் செய்த இறாலை சேர்க்கவும். நன்கு கிளறி 5 முதல் 10 நிமிடம் வேகவைத்து பின் தேங்காய் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
அரிசி நன்றாக கழுவி 1- கப்புக்கு 1 3/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். அதில் இறால் கிரேவியை கலந்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து குக்கரில் விசில் போடாமல் 20 நிமிடங்கள் வைத்து இறக்கவும். பிரியாணி தயாரான பின்பு கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி பரிமாறவும். அவ்ளோதாங்க சூடான சுவையான இறால் பிரியாணி தயார்.