திப்பிலி மிளகு சூப் !!
மழைக்காலத்தில் திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். திப்பிலியில் பைபர் உள்ளதால் அவை கொழுப்பைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது. இவற்றில் உள்ள இந்த முக்கிய கலவை பசியை அடக்காமல் எடை இழக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. மலச்சிக்கல், வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல செரிமான சிக்கல்களைத் தடுக்கும் ப்ரீபயாடிக் ஆற்றலை திப்பிலி கொண்டுள்ளது.
தேவையான பொருட்கள் :
அரிசி திப்பிலி - 8
கண்டந்திப்பிலி - 4
மிளகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - ஒன்றரை டீஸ்பூன்
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
இரண்டு வகை திப்பிலி, மிளகு இவற்றை வாணலியில் நெய்விட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் நன்றாகப் பொடித்து வைத்து கொள்ளுங்கள். அதே வாணலியில் தக்காளி, உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். திப்பிலியின் வாசனை வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கிவிடுங்கள். மேலே மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.சுவையான திப்பிலி மிளகு சூப் தயார்.