டிப்ஸ் ஓ டிப்ஸ்...!
Update: 2024-04-29 11:33 GMT
தேங்காய் வாங்கி பொரியல் கூட்டுகளில் போட்டுச் சமைப்பது முடியாத நேரத்தில் பொரியலில் சுவை கூட்ட புழுங்கலரி சியைப் பொரித்துப் பொடி செய்து அதில் தூவி இறக்குங்கள். தேங்காய் சேர்த்தது போல் இருக்கும்.
எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங் களுக்கு பச்சைமிளகாய் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும்.
ரசத்துக்கு நெய் விட்டுத் தாளித்தால் மணம் கூடும்.
உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சீக்கிரமாக வெந்து விடும்.
காப்பி டிக்காஷன் மிகுதியாகி விட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு விடுங்கள். மறுநாள் உபயோகிக்கும் போது புதிய டிக்கஷனாக மாறிவிடும்.