உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க!
சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணிஅப்பிடி எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும்.
இந்த டேஸ்டியான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்-2½டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு -5
கடுகு-¼டீஸ்பூன்
கடலை பருப்பு-½டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
மிளகு தூள்-1 டீஸ்பூன்
தனியா தூள்-1 டேபிள் ஸ்பூன்
சீரக தூள் -1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்-1¼ டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை கொ
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெட்டி வைத்துள்ள உருளை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 4 நிமிடம் வேகவிடவும்.
முக்கால் பதம் வெந்ததும் சீரக தூள், மிளகு தூள், தனியா தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்கு கலந்து விட்டு மிதமான தீயில் 4 நிமிடம் வேகவிட்டு அடுப்பை நிறுத்தவும்.