வெஜிடபிள் கோதுமை ரவை பிரியாணி ரெசிபி !!

Update: 2024-06-07 12:20 GMT

வெஜிடபிள் கோதுமை ரவை பிரியாணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கேரட் - 1

பச்சை பட்டாணி - 1/2 கப்

கல்பாசி - சிறிதளவு

பிரிஞ்சி இலை - 1

உப்பு - தேவைக்கேற்ப

பட்டை கிராம்பு ஏலக்காய் தலா - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்

மல்லி தழை மற்றும் புதினா - சிறிதளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை கல்பாசி சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு சேர்க்கவும் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவும். தண்ணீர் நன்றாக வற்றிய பின்பு மல்லித் தழை புதினா சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும் சிறிது நேரம் மூடி விடவும். வெஜிடபிள் கோதுமை ரவை பிரியாணி தயார்.

Tags:    

Similar News