வேம்புபூ இட்லி பொடி - வேறலெவல் டெஸ்ட் !!
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 1 கப்
உளுந்து - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பாசிப்பருப்பு - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
வேப்பம்பூ - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட வேப்பம்பூவை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்து, தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
தற்போது இட்லி பொடி தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து இதில் கடலைப்பருப்பு, உளுந்து, மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து நிறம் மாறா வறுத்து தட்டு ஒன்றுக்கு மாற்றி ஆற விடவும்.
தொடர்ந்து இதே கடாயில் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதே தட்டில் சேர்த்து காற்றாட ஆற விடவும்.
இதே செயல்முறையில் எடுத்துக்கொண்ட வேப்பம் பூவையும் இதே கடாயில் நெய்யுடன் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனையும் தட்டில் சேர்த்து நன்கு ஆற விடவும்.
தற்போது மிக்ஸி ஜார் ஒன்றில் இந்த சேர்மங்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு ஒருமுறை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து இதனுடன் போதுமான அளவு உப்பையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள சுவையான இட்லி பொடி ரெடி.