ஸ்வீட் செய்யும்போது இந்த ஸ்வீட்டான டிப்ஸ் -ம் சேத்து செய்யுங்க!

Update: 2024-05-20 11:24 GMT

கேசரி 

  • அதிரசம் செய்யும்போது சிறிது பேரீச்சம் பழம் கலந்து மாவைப் பிசையுங்கள். சுவை ஜோராக இருக்கும்.
  • தேன் குழல், சீடை ஆகியவற்றுக்கான மாவுடன் வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமத்துப் போகாது.
  • மைசூர்பாகு செய்யும் போது ஒரு பங்கு கடலை மாவுடன், 2 பங்கு பயத்த மாவு கலந்து செய்யுங்கள். சுவையாக இருப்பதுடன் வாயில் போட்டால் உடனே கரைந்தும் விடும்.
  • சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, அது சூடாக இருக்கும்போதே அரைக் கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • கேசரி தயாரிக்கும்போது இரண்டு பேரீச்சம் பழத்தையும் பொடியாக அரிந்து போட்டால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
Tags:    

Similar News