கருணைக்கிழங்கு துவையல் ரெசிபி !!
By : King 24x7 Angel
Update: 2024-08-04 02:30 GMT
தேவையான பொருட்கள் ;
கருணைக்கிழங்கு - 1/4 கால் கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சம்பழம் – 1
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
கடுகு - தலா ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை ;
கருணைக்கிழங்கு குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் தாளிக்கவும். மசித்த கருணைக்கிழங்கில் உப்பு, வெல்லத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொட்டியானதும் எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.