பழைய சாதம் வைத்து அற்புதமான ஹல்வா ரெசிபி செய்யலாம் வாங்க !!

Update: 2024-05-31 12:00 GMT

ஹல்வா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழைய சாதம் வைத்து ஹல்வா யாராச்சும் ட்ரை பண்ணி இருகிங்களா ..?? பழைய சாதம் வைத்து ஹல்வா செய்வது அதிகபட்சம் யாருக்கும் தேரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். ரொம்பவே ஈசி ஸ்டெப்ஸ் தான் அதே போல சுவையும் அல்டிமேட் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க...

தேவையான பொருட்கள் :

பழைய சாதம் - 2 கப்

கான்பிளவர் மாவு - 3 ஸ்பூன்

தேங்காய் பால் - ஒரு கப்

சர்க்கரை - 3 கப்

கேசரி பவுடர் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

நெய் - இரண்டு ஸ்பூன்

முந்திரி, பாதாம் பருப்பு - சிறிதளவு

செய்முறை :

2 கப் பழைய சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். 3 ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை கரைத்து கொள்ளவும். அரைத்து வைத்த சாதத்தை அத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும். இன்னொரு கடாயில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கலர் பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்துள்ளேன். அந்த சக்கரை கரைசலையும் சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். மிதமான சூடு, அதிகமான சூடு என மாற்றி மாற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் தடவி அழகிற்காக பாதாம் பருப்பு முந்திரிப் பருப்பு வைத்து அல்வாவை அந்த பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும். நன்றாக ஆறியவுடன் வேறொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். மீதமான சாதத்தை வைத்து சுவையான அல்வா தயார்.

Tags:    

Similar News