காய்கறிகளை வைத்து சுவையான ஜூஸ் செய்து குடிக்கலாம் வாங்க !!!

Update: 2024-05-14 10:06 GMT

ஜூஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கேரட், பீட்ரூட், தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை ஆகியவை எவ்வளவு ஆரோக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். இந்த பொருள்கள் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு சுவையான ஜூஸ் செய்து குடித்தால் ஜூஸ் குடிச்ச மாதிரியும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போ வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

​கேரட் - 1,

பீட்ரூட் - பாதியளவு,

இஞ்சி - 1 துண்டு,

கொத்தமல்லி தண்டு - சிறிதளவு,

தேங்காய் துருவல் - கால் கப்,

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,

நாட்டுச் சர்க்கரை - 2 ஸ்பூன்,

ஏலக்காய் - 1,

செய்முறை :

கேரட்டை தோல் சீவி, கழுவிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய சைஸ் பீட்ரூட்டில் பாதியளவு எடுத்து, அதையும் தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதை ஒரு மிக்ஸர் ஜாரில் சேர்த்துக் கொண்டு அதோடு தோல் சீவி நறுக்கிய இஞ்சி, சிறிது கொத்தமல்லி தண்டு, ஒரு ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீரும் சேர்தது நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் அதில் உங்களுக்கு ஜூஸ் குடிக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வடிகட்டிய ஜூஸில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையும் எலுமிச்சை சாறும் கலந்தால் சூப்பரான டிரிங்க் ரெடி.

(தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்).

Tags:    

Similar News