யாம் சட்னி !

மூலவியாதியை மூன்று தினத்தில் விரட்டிடும் மந்திர உணவு யாம்சட்னி.

Update: 2024-04-23 10:23 GMT

யாம் சட்னி

'மூலவியாதியைக் குறைப்பதில் கருணைக்கிழங்கு சட்னிதான் முதல்தர மருத்துவர்

(ஐந்து நபர்களுக்கு)

தேயைவயான பொருட்கள் 

பிடி கருணைக்கிழங்கு (அ)

சேனைக்கிழங்கு                       - 50 கிராம்

வறுக்காத முந்திரிப்பருப்பு    - 250 கிராம்

மிளகுத்தூள், சீரகத்தூள்          - சிறிது

பிளாக்சால்ட், இந்துப்பு            - சிறிது

தேங்காய் துருவல்                     - 1 மூடி 

பூண்டு                                          - சிறிது

கொத்தமல்லி, புதினா              - சிறிது

தயாரிப்பு முறை:-

பிடி கருணைக் கிழங்கை தோல் சீவி சிறிதாக வெட்டவும். முந்திரிப்பருப்பை ஊறவைக்கலாம் வெட்டிய கருணைக் கிழங்கை சிறிது நீர்விட்டு சட்னிபோல் அரைக்கவும். தேங்காய் துருவலையும் சட்னி போல் அரைக்கவும் பூண்டு, ஊறிய முந்திரிப் பருப்பையும், கருவேப்பிலை.மல்லியையும் சட்னிபோல் அரைக்கவும் எல்லாவற்றையும் கலந்து மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக்சாலட் சேர்த்தால் சுவையான போஷாக்கான, யாம்சட்னி சாப்பிடத் தயார் தனியாகவும் சாப்பிடலாம் பிற உணவுகளுடன் இணைத்தும் சாப்பிடலாம் பின்னால் தரப்பட்டிருக்கும் அவல் சாத வகைகளுடன் இணைத்துப் பயன்படுத்தலாம். சப்பாத்தி, இட்லி வகைகளுடனும் பயன்படுத்தாம்.

இதேபோல் கருணைக் கிழங்குக்குப் பதில் சேனைக்கிழங்கு சேர்த்து சேனைக்கிழங்குச் சட்னி செய்யலாம். பீட்ரூட் சட்னி செய்யலாம். பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் மிக அருமையாக இருக்கும்.

பயன்கள்:

இதில் அடுப்புப் பயன்படுத்தப்படவில்லை. எனவே தேங்காய் முழுமைபெற்ற கொழுப்பாக மாறுவதில்லை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தலாம். நலவாழ்வு முகாம்களில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சட்னி, மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், குடல் தொல்லைகள், விலகி உடல் தெம்பும், பலமும் பெருகும் நீரிழிவு அன்பர்களுக்கும் ஏற்ற அருமையான சட்னி மூலவியாதி அன்பர்களுக்கு இதுவே அருமையான மருந்து உடலில் குளிர்ச்சி தந்து தேவையற்ற உடல் சூடு, மூலச்சூடு குறையும் சளி, இருமல், பிணிகள் மறையும். இரத்த மூலம், இரத்த ஒழுகல் குறையும் கணிணியியல் உலகில் பல அன்பர்கள் அமர்ந்த இடத்திலேயே இருந்து பணிகள் செய்வதாலும் குளிர் அறையில் தொடர்ந்து உள்ளதாலும் நரம்புகள் தளர்வடைந்து கடின மலச்சிக்கல், கணச்சூட்டில் அவதிப்படும் அன்பர்கள் தினமும் யாம் சட்னியால் நல்ல பலன் பெறலாம். இச்சட்னியை இட்லி, தோசை, அவல்சாத வகைகளுக்கும் செய்து சாப்பிடலாம். இது ஒரு அருமையான ஆரோக்கியமான உணவு.

Tags:    

Similar News