27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படும் முதல் ஒன்றிய பட்ஜெட்!!

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையில் முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.;

Update: 2026-01-31 14:21 GMT

நாடாளுமன்றத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது அரிய சம்பவம் என்பதால் இந்திய அரசியல் வட்டாரங்களிலும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அப்போதைய மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளது. 2026–27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாளை, பிப்ரவரி 1, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, வர்த்தக நிலை, வளர்ச்சி இலக்குகள், வேலைவாய்ப்பு, பணவீக்கம், தொழில்துறை முன்னேற்றம், விவசாயம் மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல முக்கிய துறைகளை நேரடியாக பாதிக்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Similar News