இந்துக்கள் அல்லாதோர் நுழையத் தடை..! - பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடு!!
உத்தரகாண்ட்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்களை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.;
உத்தரகாண்ட்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்களை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர், "தேவபூமியான உத்தரகாண்ட்டின் மத மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பது மிக முக்கியம்" என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பான தீர்மானம் BKTC-யின் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திரிவேதி குறிப்பிட்டார். இந்தக் கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதோர் பொதுவாக நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்பது பாரம்பரியம் என்றும் ஆனால், பாஜக அல்லாத அரசுகள் ஆட்சியில் இருந்தபோது இந்த நீண்டகால மரபுகள் மீறப்பட்டதாக ஹேமந்த் திரிவேதி குற்றம் சாட்டினார். கோயில்களின் புனிதத்தன்மையையும், பழமையான சடங்குகளையும் உறுதிப்படுத்த, கோயில் கமிட்டி இனி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார். மேலும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றும் மாநில அரசின் நடவடிக்கையையும் திரிவேதி பாராட்டினார். இது உத்தரகண்ட்டின் மத அடையாளம், கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கை என்றார். உத்தரகாண்ட் கோயில்களின் புனிதத்தன்மையையும் பாரம்பரியத்தையும் இது பாதுகாக்க உதவும் என்றும் அவர் கூறினார். அதேநேரம் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களைக் குழப்பவும் உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பவுமே பாஜக அரசு இதைச் செய்வதாகவும் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சூர்யகாந்த் தாஸ்மானா சாடியுள்ளார். இது தொடர்பாக அவர், "இந்துக்கள் அல்லாதோர் இந்தக் கோயில்களுக்கு வருவதில்லை.. அப்படியிருக்கும்போது இதுபோன்ற தடை அவசியமில்லை. மாநிலத்தின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பாஜக இதைச் செய்கிறார்கள்" என்றும் அவர் மேலும் கூறினார்.