அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2023-11-25 06:44 GMT
திருவண்ணாமலை அகில இந்திய விவசாயி கள் மகாசபை சார்பில் திருவண்ணாமலை அடுத்து ஆவூர் பஸ் நிலையம் அருகில் ஏழுமலை தலைமையில் மற்றும் தேசிய கவுன்சிலர் உறுப்பினர் அய்யந்துரை, மாவட்டச் செயலாளர் ஜெகன், தேசிய செயற்குழு உறுப்பினர் மாலினி, ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மேல்மா சிப்காட் 3 விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்,
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அருள் ஆறுமுகத்தை உடனடி யாக விடுதலை செய்திட வேண்டும், தமிழக அரசு செய்யாறு சிப்காட் தொழில் அமைப்பதற்கு எதிரான ஜனநாயக வழியிலான எதிரானவர்களை சித்தரித்தும் வெளியிட்ட அறிக்கை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.