திருமயம்: அரிமளம் ஒன்றியம் கழனிவாசலில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் நிலையில், ஆண் உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க பெண் உடற்கல்வி ஆசிரியை இல்லை. இதனால் வெளிமாவட்டங்களுக்கு விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவிகளை பெற்றோர்கள் தங்கள் பொறுப்பில் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இதுபற்றி தலைமையாசிரியரிடம் கேட்டால் அரசுதான் நியமிக்க வேண்டும் என்கின்றனர். பள்ளியில் மாணவிகளுக்கு போதிய சுகாதார வசதி இல்லை. கூடுதலாக 2 கழிப்பிடங்கள் கட்டவேண்டும். பள்ளிகல்வித்துறை இயக்குநர் உடனடியாக பள்ளிக்கு பெண் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.