கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக சிற்றாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் அதிகமாக கொட்டி வந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 9 நாட்கள் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (18-ம் தேதி) முதல் அருவியல் கொட்டும் தண்ணீரின் அளவு சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் அருவியில் தண்ணீர் குறைவாக வரும் பகுதியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது அனுமதிக்கப்பட்டனர்.