உடுமலை பஞ்சலிங்க அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு

கோவிலில் பூஜைகள் துவக்கம்

Update: 2024-11-18 15:19 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடிவாரம் பகுதியில் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலை நேற்று இரவு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது இருப்பினும் கோவில் பகுதியில் வெள்ளம் நீர் வடிந்த காரணத்தால் தற்பொழுது கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது இதற்கிடையில் பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

Similar News