திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி 2வது கட்ட சாலை அமைக்கும் பணிகளை நகர மன்ற தலைவர் நளினி பாபுதொடங்கி வைத்தார்

திருச்செங்கோடு நகராட்சி 22 வது வார்டு 19 ஆவது வார்டு பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி பூமி பூஜை செய்து துவக்கம் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பணியை துவக்கி வைத்தார்;

Update: 2026-02-04 14:33 GMT
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதிகளிலும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே 47 லட்சம் மதிப்பில் பல்வேறு சாலைகள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி இரண்டாம் கட்டமாக 22வது வார்டுராஜா கவுண்டம்பாளையம் தெரு எண் 5 ல்72 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கும் பணி,தெரு எண் நான்கில்30 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கும் பணி வார்டு எண் 19 கூட்டப் பள்ளி அருந்ததியர் தெரு பகுதியில் 150 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கும் பணி பிருந்தாவன் நகர் மூன்றாவது தெருவில் 200 மீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கும் பணி ஆகியவை பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு உதவி பொறியாளர் சத்திய நாகராணி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பகுதி பிரமுகர்கள் பொதுமக்கள்என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Similar News