தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிப்பு
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் குமாரபாளையம் தி.மு.க. சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.;
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் அண்ணாவின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது . தி.மு.க. கட்சி அலுவலகத்திலிருந்து மவுன ஊர்வலம் துவங்கி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலை வரை நடந்தது. நகர வடக்கு பொறுப்பாளரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் தலைமை வகித்தார். அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு, விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். நகர தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையிலான ஆதரவாளர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்.