பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது;
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இது குறித்து தாசில்தார் பிரகாஷ் கூறியதாவது: குமாரபாளையம் தொகுதியில், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் 324 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. இதில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகதில் நடந்தது. இந்த ஓட்டுச்சாவடிகள் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி, கவுதம் உள்ளிட்ட போலீசார், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.