கீரீன் வேர்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா...

கீரீன் வேர்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்சி பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா...;

Update: 2026-02-04 16:35 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மூலப்பள்ளிப் பட்டியில் அமைந்துள்ள கிரீன் வேர்ல்டு எக்ஸெல் சிபிஎஸ்சி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் 75-75 மதிப்பெண்கள் பெற்று சேம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் அணி இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றது. இகோ அகாடமி மேஜிக்கல் ஹேண்ட் இம்ப்ரூவ்மெண்ட் நடத்திய ஆங்கில எழுத்து பயிற்சி போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் தங்களது சிறப்பு திறனை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றுள்ளனர். கொங்கு சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் நடத்திய நான்காம் ஆண்டு கோ -கோ போட்டியில், இப்பள்ளி மாணவர்கள் 10, 12 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் ஸ்ரீப்ரவிணா, சேர்மேன் வருதராஜன், பொருளாளர் ஆர்.திருமூர்த்தி, இயக்குநர்கள் பிரபு, தனசேகரன், ராஜசேகரன், ராஜா உள்ளிட்டோர் பாராட்டி பரிசளித்தனர். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பேசும்போது இப்பள்ளியில் கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதோ அதே அளவிற்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெற்றோர்களுக்கு பல சிரமங்கள் இருக்கும் நேரத்தில் கூட பிள்ளைகளை கவனிக்க முடியாமல் சிலர் அலட்சியமாக இருக்கின்றோம் இருப்பினும் இங்கு படிக்கக்கூடிய ஒவ்வொரு மாணவ மாணவிகளை அவர்கள் திறமைகளை கண்டறிந்து இது போன்ற சாதனைக்குரியவர்களாக அவர்கள் நம்மிடம் அவர்களை கொடுக்கிறார்கள். அதே வேளையில் நாமும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் எப்படி படிக்கிறார்கள் என்றெல்லாம் கவனித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறி பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், நிர்வாக இயக்குனர்களுக்கும் பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என பேசினர். மேலும் தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அவர்களின் கையால் பரிசுகள் வழங்கவும் நிர்வாகம் ஏற்பாடு செய்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News