ஞானமணி கல்லூரியில் நடைபெற்ற உலக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பாச்சல் பகுதியில் செயல்பட்டு வரும் ஞானமணி கல்வி நிறுவனங்கள் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.;
இதில் 2,500 மாணவர்கள் ஒன்றிணைந்து மனித புற்றுநோய் ரிப்பன் வடிவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆரம்ப கட்ட கண்டறிதலின் அவசியத்தை உணர்த்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குதல் ஆகும். மேலிருந்து பார்க்கும் போது மாணவர்கள் ஒழுங்காக அமைந்து உருவாக்கிய இளஞ்சிவப்பு புற்றுநோய் ரிப்பன் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் கருத்தாக “புற்றுநோய் என்பது ஒரு சொல் மட்டுமே; அது ஒரு முடிவல்ல” என்பதும், “ஆரம்ப கட்ட கண்டறிதலே உயிரைக் காக்கும் முதல் படி” என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேலும், “ஒற்றுமையுடன் நின்றால் புற்றுநோயையும் வெல்லலாம்” என்ற செய்தி மாணவர்களிடையே வலுவாகப் பிரதிபலித்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவேற்றினர். மாணவர்களின் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் பாராட்டி ஞானமணி கல்வி நிறுவனத்தின் தலைவர் முனைவர் தி. அரங்கண்ணல், தாளாளர் பி. மாலாலீனா, துணை தாளாளர் செல்வி மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி. பிரேம்குமார், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் செயல் இயக்குநர் முனைவர் எம்.மாதேஸ்வரன், முதல்வர் பி. சஞ்சய் காந்தி, துணை முதல்வர்கள் முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களிடம் சமூக அக்கறை, தலைமைத் திறன் மற்றும் மனிதநேய மதிப்புகளை வளர்க்க ஞானமணி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.