நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்“ பயனாளிகள் உட்பட 4,439 பயனாளிகளுக்கு ரூ.9.03 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலை, கொள்ளார் கிராமம், சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, "என் கனவு என் எதிர்காலம்" என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்து, விழுப்புரம் மாவட்டத்தின் முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி விழாப் பேருரை ஆற்றினார்கள்.;
அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், சுஜிதா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய்த்துறை, தொழிலாளர் நல வாரியம் (ச.பா.தி), கூட்டுறவுத்துறை மற்றும் வட்ட வழங்கல் துறை சார்பில் 1,635 பயனாளிகளுக்கு ரூ.4.56 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற மாபெரும் திட்டத்தினை கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்கள். கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் இத்திட்டமானது 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (04.02.2026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழாவில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கினார்கள்.அதனடிப்படையில் இராசிபுரம் வட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 778 பயனாளிகளுக்கு ரூ.2,90,79,200/- மதிப்பில் பல்வேறு உதவித்தொகைள், தொழிலாளர் நல வாரியம் (ச.பா.தி) சார்பில் 495 பயனாளிகளுக்கு ரூ.15,64,000/- மதிப்பில் பல்வேறு உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,49,57,000/- மதிப்பில் கடனுதவிகள், வட்ட வழங்கல் துறை சார்பில் 264 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என 1,635 பயனாளிகளுக்கு ரூ.4,56,00,200/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 686 பயனாளிகளுக்கு ரூ.1,05,87,600/- மதிப்பில் பல்வேறு உதவித்தொகைகள், தொழிலாளர் நல வாரியம் (ச.பா.தி) சார்பில் 800 பயனாளிகளுக்கு ரூ.29,11,200/- மதிப்பில் பல்வேறு உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.85,00,000/- மதிப்பில் கடனுதவிகள், வட்ட வழங்கல் துறை சார்பில் 117 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என 1,704 பயனாளிகளுக்கு ரூ.2,19,98,800/- மதிப்பிலும், சேந்தமங்கலம் வட்டம், வசந்த மஹாலில், வருவாய்த்துறையின் சார்பில் 544 பயனாளிகளுக்கு ரூ.89,10,400/- மதிப்பில் பல்வேறு உதவித்தொகைள், தொழிலாளர் நல வாரியம் (ச.பா.தி) சார்பில் 350 பயனாளிகளுக்கு ரூ.19,25,400/- மதிப்பில் பல்வேறு உதவித்தொகை, கூட்டுறவுத்துறையின் சார்பில் 102 பயனாளிகளுக்கு ரூ.1,14,49,000/- மதிப்பில் கடனுதவிகள், வட்ட வழங்கல் துறை சார்பில் 89 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என 1,100 பயனாளிகளுக்கு ரூ.2,26,69,800/- மதிப்பிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஆக இன்றைய தினம் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்“ பயனாளிகள் உட்பட 4,439 பயனாளிகளுக்கு ரூ.9.03 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மக்களுடன் முதல்வர், விடியல் பயண திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எவரும் செயல்படுத்த இயலாத சாதனை திட்டங்களாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் காலத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார்கள். அந்த வகையில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றியுள்ள அனைத்து திட்டங்களும், எக்காலத்திலும் எவராலும் முறியடிக்க முடியாக சாதனை திட்டங்களாகும்.தமிழ்நாடு முதலமைச்சர் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.854.37 கோடி மதிப்பில் 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தினை நாளைய தினம் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டம் என்பது மிகப்பெரிய கனவு திட்டமாகும். இராசிபுரம் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும். மேலும் இராசிபுரம் நகராட்சி, அனைப்பாளையம் பகுதியில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் தரைதளம் உட்பட 6 தளங்களுடன் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதேபோல போதமலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34.12 கோடி மதிப்பீட்டில் புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.90 கி.மீ நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி முடிவுற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ராமசாமி, இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், அட்மா குழு தலைவர்கள் .கே.பி.ஜெகநாதன் (இராசிபுரம்), ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்) மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (ச.பா.தி) கே.பி.இந்தியா, இராசிபுரம் வட்டாட்சியர் எஸ்.சசிகுமார் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.