உடுமலை அருகே மக்காச்சோளத்தை பாதுகாக்க போராட்டம்
காட்டுப் பன்றிகளை விரட்ட நடவடிக்கை அவசியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புதுப்பாளையம் அடிவள்ளி விருகல்பட்டி அம்மாபட்டி ஆமந்த கடவு உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர் இந்த நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன இதனால் ஓரளவு பாதிப்பை தவிர்க்க வரப்பு ஓரங்களில் வண்ண சேலை கட்டுதல் கயிறு கட்டி மருந்து தொங்க விடுதல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர் எனவே ஏக்கருக்கு 20 ஆயிரம் செலவு செய்திருக்கும் நிலையில் காட்டுப்பன்றிகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்