உடுமலை அருகே தூவானம் அருவியில் வெள்ளப்பெருக்கு
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு மறையூர் காந்தளூர் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் முக்கிய பிடிப்பு பகுதியான தூவானம் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1217 கன அடியாக அதிகரித்துள்ளது மேலும் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 87.01 அடியாக உள்ளது மேலும் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது .எனவே கரையோர கிராமங்களான கல்லாபுரம் கொழமம் ருத்ரபாளையம் குமாரலிங்கம் மடத்துக்குளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்புக்கான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்தை சுழற்சி முறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்