பண்டமங்கலம் பேரூராட்சி சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்ட சத்து வழங்கள்.

பண்டமங்கலம் பேரூராட்சி சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்ட சத்து வழங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-11-18 15:43 GMT
பரமத்தி வேலூர், நவ.18: பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலம், அங்கன்வாடி மையத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற இரண்டாம் கட்ட நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் பெருமாள் என்கிற முருகவேல், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை தாய்மார்களுக்கு வழங்கினார்கள். இந்த திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 6 மாதம் வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 பெட்டகம் வழங்கப்படுகிறது. அதே போல் 6 மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு அதாவது 56 நாட்களுக்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த சத்து மருந்து வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Similar News