ராசிபுரத்தில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பாலமுருகன்...
ராசிபுரத்தில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பாலமுருகன்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ பால முருகன் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் பாலமுருகன் கோயில் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து தங்க காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..