ராசிபுரம் ஸ்ரீ பால முருகன் கோவிலில் தைப்பூசம் சிறப்பு அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ பால முருகன் கோவிலில் தைப்பூசம் சிறப்பு அலங்காரம்..;

Update: 2026-02-01 15:21 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் பௌர்ணமி முன்னிட்டு அதி காலை முதலே நடை திறக்கப்பட்டு ஸ்ரீ பால முருகனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் ஸ்ரீ பாலமுருகன் சாமிக்கு வெள்ளி கவசம் மற்றும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்வி பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பாலமுருகன் சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது..

Similar News