தைப்பூச திருவிழா: சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு பல்வேறு ஆன்மீக அமைப்பினர் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கினார்கள்.;
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற தத்தகிரி முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தைப்பூசத்தை முன்னிட்டு, தத்தகிரி முருகன் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முன்னதாக சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.தைப்பூச திருவிழாவையொட்டி திருக்கோவிலில் முழுவதும் பக்தி சூழல் நிலவியது.மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு பல்வேறு ஆன்மீக அமைப்பினர் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கினார்கள்.