ஆடி அமாவாசையையொட்டி
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
மாதந்தோறும் வழிபாடு மேற்கொள்ள முடியாதவர்கள், இந்த ஆடி அமாவாசையில் வழிபாடு மேற்கொண்டால் ஆறு மாதம் தங்கள் முன்னோர்களை வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம். எனவே, ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள் இதனால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே தங்கள் குடும்பத்தில் உயிரிழந்த முன்னோர்களுக்கு ஏராளமான பொது மக்கள் திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர்.