திருநெல்வேலி மாவட்ட அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று 10வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற்றது.இந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.