திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது.இதனை தொடர்ந்து மாபெரும் தூய்மை பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பார்வையிட்டு தூய்மை பணிகள் மேற்கொண்ட அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள்,மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பாராட்டினார்.இந்த நிகழ்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.