நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் நிரபராதி நீதிமன்றம் தீர்ப்பு
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என்று இன்று தீர்ப்பு திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு
சின்னத்திரையில் வேகமாக வளர்ந்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது . மேலும் சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து ஹேம்நாத்தை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், ஜாமினில் வெளிய வந்தார். மேலும் சித்ரா தற்கொலை தொடர்பாக வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நசரத்பேட்டை போலீசார் தங்களது விசாரணை அறிக்கை முழுவதையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆவடி குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை அரசு வழக்கறிஞர் எஸ்.கே.ஆதாம் வாதாடினார். இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார்.