பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக காவலர் பணியிடை நீக்கம்
தூத்துக்குடியில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாக தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத் தலைமைக் காவலர் சுரேஷ். தூத்துக்குடி கதிர்வேல் நகரில் வசித்துவரும் இவர், சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் மதுபோதையில், ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்hகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக அந்தக் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்தத் தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சுரேஷ் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதையடுத்து, காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், சுரேஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதாக, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.