டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்து மாவட்ட மேலாளரிடம் மனு அளித்தனர்
கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும், என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்து, மாவட்ட மேலாளரிடம் மனு அளித்தனர் ... பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள டாஸ்மாக் மொத்த விற்பனை மதுபான கிடங்கு மற்றும் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு, டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்செய்தனர், இதில், டாஸ்மாக்கில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில், விற்பனையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதால் அவற்றை தமிழக அரசு பரிசீலனை செய்து இதற்காக கூடுதலான பணியாட்களை அமர்த்த வேண்டும், அதற்கான உள்கட்டமைப்பு, இட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், மேலும் மதுபான ஆலைகள் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களின் நிரந்தர பணி மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து இதற்கான மனுவை டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் வழங்கினார்கள். மாநில துணைச் செயலாளர்கள் சாதிக் பாட்ஷா, மோகன், சௌந்தரராஜன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட அமைப்பாளர் ராஜா கொளஞ்சியப்பன் உள்ளிட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேலாளர்கள் 100-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.