மத்திய அரசை கண்டித்து மதிமுக கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசுக்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து மதிமுக கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் ........... பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் சென்னை மற்றும் நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையின் போது ஏற்பட்ட சேதாரத்திற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட பேரிடர் நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்தும், மத்திய நிதி பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் வர்ணவாசி ராஜேந்திரன் கண்டன பேருரை நிகழ்த்தினார், மற்றும் மதிமுக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் துரைராஜ், வரதராஜன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட அவை தலைவர் சுப்பிரமணியன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் காமராஜ், ரங்கராஜ் மங்கையர்க்கரசி, பாண்டியன், உள்ளிட்ட மாவட்ட , வட்டார ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .